தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


ADDED : நவ 07, 2024 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2024 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால், காங்கேயத்தில் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த ஓலப்பாளையம், சோழவலசை சேர்ந்தவர் நடராஜ், 60. இவர் கடந்த, 2019ம் ஆண்டு ஓலப்பாளையம் அருகே, மொபட்டில் சென்ற போது, அரசு பஸ் மோதி படுகாயமடைந்தார்.

இழப்பீடு கேட்டு, நீதிமன்றத்தில் நடராஜ் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் இழப்பீடாக, இரண்டு லட்சத்து, 35 ஆயிரம் ரூபாயை வட்டியுடன் நடராஜூக்கு வழங்க நீதிமன்றம் கடந்தாண்டு ஜனவரி, 27ம் தேதி உத்தரவிட்டது.ஆனால், இழப்பீடு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால், நடராஜ் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, நேற்று காங்கேயம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த அரசு பஸ்சை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து கொண்டு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us