/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நிறைவு
/
பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நிறைவு
ADDED : ஜூலை 22, 2025 01:30 AM
ஈரோடு, ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், கடந்த சில தினங்களாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, மாவட்டத்திற்குள்ளும், பிற மாவட்டங்களுக்கும் நடந்தது.
இதில் முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர். கணித பிரிவு பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல நடந்தது. இதற்கு, 24 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து நடப்பாண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. அதேசமயம் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடர்கிறது.சமக்ர சிக்ஷா சார்பில், ஈரோடு ப.செ.பார்க் பகுதி அலுவலகத்தில், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, இன்றும், நாளையும் கவுன்சிலிங் நடக்கிறது.