ADDED : ஜன 21, 2026 10:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: குடியரசு தினமான, வரும், 26ம் தேதி காலை, 11:00 மணிக்கு, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது. கூட்டம் நடக்கும் இடம், நேரம் தொடர்புடைய பஞ்.,கள் மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படும்.
பஞ்., நிர்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பற்றி விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், 100 நாள் வேலை திட்ட வரவு - செலவு பற்றி அறிக்கை விவாதித்தல் நடக்கும்.

