ADDED : ஏப் 26, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி, முருங்கத்தொழுவு ஆ வருவாய் கிராமம், வடுகபாளையம், வெள்ளியணகாடு பகுதியில், அனுமதியின்றி கிராவல் மண் எடுப்பதாக புகார் போனது. இதையடுத்து புவியியல் மற்றும் சுரங்க துறை அதிகாரிகள், சென்னிமலை வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன், கிராம நிர்வாக அதிகாரிகள், போலீசாருடன் சென்றனர். அங்கு இரண்டு டிப்பர் லாரியில் மண் ஏற்றி கொண்டிருந்தனர்.
விசாரணையில் உரிய அனுமதி பெறாதது தெரிய வந்தது. இரண்டு லாரிகளையும் கைப்பற்றி சென்னிமலை போலீஸில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர், உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
