ADDED : ஆக 24, 2026 05:39 AM
சென்னிமலை:சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களில், மதுரை மாநகரில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வும் ஒன்று. இந்நிகழ்வு மதுரையில் வைகை நதிக்கரையில் நடந்தது. இதில் வந்தி மூதாட்டி, பாண்டிய மன்னனுக்குசிவபெருமான் தரிசனம் தந்தார். அந்த நாளே ஆவணி
மாத மூல நட்சத்திர நாளாக கருதப்படுகிறது.
சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இவ்விழா, 46வது ஆண்டாக நேற்றும் நடந்தது. இதையொட்டி காலை, 11:00 மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிறகு சென்னிமலை மலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில், வைகை கரை போல் அமைக்கப்பட்டிருந்தது. மாலை, 5:10 மணிக்கு கைலாசநாதர், சிவகாமி அம்மாள், மற்றும் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி ஐந்து பேரும் சகடை தேரில் எழுந்தருளினர். சென்னிமலை கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஓதுவார் மூர்த்தி ஆனந்த், சிவபெருமானின் பிட்டுத் திருவிளையாடல் குறித்த பாடல்களை பாடினார். இதில் ஏராளமாக பெண்கள் குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து வைகை கரையில் ஊற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
