ADDED : அக் 24, 2024 01:25 AM
அ நிறம் | அளவு
ரூ. 4.53 லட்சத்துக்கு
நிலக்கடலை ஏலம்
கொடுமுடி, அக். 24-
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ரூ.4.53 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. கொடுமுடி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 199 நிலக்கடலை மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 62.10 ரூபாய், அதிகபட்சமாக, 76.19 ரூபாய், சராசரியாக, 70.70 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 70.06 குவிண்டால் எடையுள்ள நிலக்கடலை, நான்கு லட்சத்து, 53 ஆயிரத்து, 313 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
