/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பகவதி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா ஜோர்
/
பகவதி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா ஜோர்
ADDED : மார் 29, 2024 05:03 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி அருகேயுள்ள கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவிலில், குண்டம் விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
முன்னதாக விழா கடந்த, 14ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26ம் தேதி தீர்த்தக்குட ஊர்வலம், 27ம் தேதி காலை பச்சை பூஜை, மாலையில் அரண்மனை பொங்கல் வைபவம் நடந்தது. நேற்று முன் இரவு, 60 அடி நீள குண்டத்துக்கு தீ மூட்டப்பட்டப்பட்டது. நேற்று காலை, 7:15 மணியளவில் பூசாரிகள் மூர்த்தி, பவுன், கோவில் நிர்வாகிகள் நவநீதன், சக்திவேல் ஆகியோர் முதலில் குண்டம் இறங்கி விழாவை தொடங்கி வைத்தனர்.
இதை தொடர்ந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, 3,000க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று தீ மிதித்தனர். இன்று மாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், இரவில் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது. ஏப்.,1ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

