/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் விழா ஜோர்
/
செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் விழா ஜோர்
ADDED : ஜன 03, 2025 01:04 AM
செல்லாண்டியம்மன் கோவிலில்குண்டம் விழா ஜோர்
கோபி, ஜன. 3-
கோபி அருகே அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 20ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இந்நிலையில் குண்டம் விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக அதிகாலை, 3:00 மணிக்கு அம்மை அழைப்பு நடந்தது. அதன்பின் அம்மன் சன்னதிக்கு எதிரே, 60 அடி நீள குண்டத்தில், தலைமை பூசாரி செந்தில்குமார் முதலில் தீ மிதித்தார். இதையடுத்து பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் அளுக்குளி, கோபிபாளையம், கணபதிபாளையம், ஆயிபாளையம், அலிங்கியம், கோட்டுப்புள்ளாம்பாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.

