ADDED : மே 26, 2026 04:37 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், கடந்த, 30ல் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பார்சல் அலுவலக பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு டூவீலர் ஸ்டாண்டில் இருவரை பிடித்து விசாரித்தனர். கோவை, குனியமுத்துார் அப்சல், 19; கோவை பீளமேடு ரெனால்ட் லியோனி, 27, என தெரிந்தது.
அவர்கள் வைத்திருந்த பையில் தலா, 5 கிலோ என, 10 கிலோ கஞ்சா இருந்ததால் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். ஈரோடு எஸ்.பி., கிரண் ஸ்ருதி பரிந்துரைப்படி, கலெக்டர் கந்தசாமி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதன்படி இருவரும் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
