ADDED : ஆக 27, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு அருகே தந்தை மற்றும் தாயை, சொத்து கேட்டு அடுத்தடுத்து கொன்ற பொல்லாத மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஈரோடு அடுத்த நஞ்சனாபுரம் வேப்பம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன் ரவிக்குமார், 38. பெற்றோருக்கு ஒரே மகன். சொத்து தொடர்பான பிரச்னையில், சில ஆண்டுக்கு முன் தந்தையை கொலை செய்த இவர், சிறை சென்றார்.
ஜாமினில் வந்த அவர், சில மாதங்களுக்கு முன், தாயையும் சொத்து பிரச்னைக்காக கொலை செய்தார்.
ஈரோடு தாலுகா போலீசார், அவரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., பரிந்துரைத்தார்.
இதை கலெக்டர் ஏற்றதால் குண்டர் சட்டம் பாய்ந்தது.

