ADDED : மே 17, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு வீரப்பன்சத்திரம் திருமலை வீதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 25; இவர் மீது வழிப்பறி, மொபைல் போன் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ஒரு திருட்டு வழக்கில் வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்து, மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, ஈரோடு எஸ்.பி., கிரண் ஸ்ருதி பரிந்துரைத்தார். கலெக்டர் கந்தசாமி பரிசீலனையை ஏற்றதால், பிரவீன்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
