/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சலுான் உரிமையாளர் கொலை4 பேர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
/
சலுான் உரிமையாளர் கொலை4 பேர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
சலுான் உரிமையாளர் கொலை4 பேர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
சலுான் உரிமையாளர் கொலை4 பேர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
ADDED : ஆக 27, 2025 01:17 AM
பல்லடம், பல்லடம் மாணிக்காபுரம் ரோட்டை சேர்ந்தவர் கவியரசன் 22. சலூன் கடை நடத்தி வந்தார். கடந்த, ஜூலை மாதம் இவரது கடைக்குள் புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், பல்லடம் வேலம்பாளையத்தை சேர்ந்த பாபு மகன் பார்த்திபன், 27, தெற்குபாளையத்தை சேர்ந்த ரமேஷ் மகன் கோபாலகிருஷ்ணன், 23, அண்ணாநகரை சேர்ந்த பழனிசாமி மகன் தாமரைச்சந்திரன், 23 மற்றும் அம்மாபாளையத்தைச் சேர்ந்த தனபால் மகன் பிரித்விராஜ் 23 ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பபட்டனர். பல்லடம் கோர்ட்டில் இந்த வழக்கு குறித்த விசாரணை நடத்தது. அதில், நான்கு பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதை கருத்தில் கொண்டு, கலெக்டர் பரிந்துரையின் பேரில், நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.