ADDED : செப் 24, 2026 06:36 AM
ஈரோடு:ஈரோட்டில் வாலிபரை கடத்தி, பீர் பாட்டிலால் தாக்கி கைதான பழங்குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
ஈரோடு,
சாஸ்திரி நகர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த வைரவேல், 22, ரகுபதி
நாயக்கன்பாளையம் ரெயின்போ கார்டன் பிரதாப், 22, ஆகியோர் மீது போதை
மாத்திரை, கஞ்சா விற்றதாக, 10க்கும் மேற்பட்ட வழக்கு நிலுவையில்
உள்ளன. ஏற்கனவே குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும்,
2 மாதத்துக்கு முன் போதை மாத்திரை விற்பனை செய்வதாக, மூலப்பாளையம்
ஜீவா நகர் ரோஷன் என்பவர், போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக
கூறப்படுகிறது.
இதையறிந்த வைரவேல், பிரதாப் மற்றும் அவரது
நண்பர்கள் ரோஷனின் தம்பி கவுதம், 21, என்பவரை ஆக., 25ல், பீர்
பாட்டிலால் தாக்கினர். படுகாயமடைந்த கவுதம் அளித்த புகாரின்படி,
ஈரோடு தாலுகா போலீசார் வைரவேல், பிரதாப் இருவர் மீதும் அடிதடி மற்றும் ஆள்
கடத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர். நீதிமன்ற
உத்தரவின்படி, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
வைரவேல், பிரதாப்
ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, எஸ்.பி., மூலம்
ஈரோடு கலெக்டருக்கு தாலுகா போலீசார் பரிந்துரைத்தனர். கலெக்டர்
கந்தசாமி பரிசீலனை செய்து வைரவேல், பிரதாப்பை குண்டர் தடுப்பு
சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி இருவரும் கோவை
மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
