தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இயற்பியல் ஆசிரியர் மாற்றப்பட்ட விவகாரத்தில் குருமந்துார் அரசு மேல்நிலைப்பள்ளி முற்றுகை

இயற்பியல் ஆசிரியர் மாற்றப்பட்ட விவகாரத்தில் குருமந்துார் அரசு மேல்நிலைப்பள்ளி முற்றுகை

இயற்பியல் ஆசிரியர் மாற்றப்பட்ட விவகாரத்தில் குருமந்துார் அரசு மேல்நிலைப்பள்ளி முற்றுகை


ADDED : பிப் 21, 2026 09:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 09:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்பியூர்: நம்பியூர் அருகே குருமந்துாரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் கடந்த நான்கு ஆண்டுகளாக, முதுநிலை இயற்பியல் ஆசிரியையாக பாரதி பணியாற்றினார்.

இயற்பியல் பாடத்தில் மாணவர்கள் மதிப்பெண் குறைந்ததால், உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு கட்- ஆப் மதிப்பெண் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர், மாணவர்கள் தரப்பில் பள்ளி கல்வித்துறைக்கு புகார் போனதால், மூன்று மாதத்துக்கு முன்பு வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பாரதி மீண்டும் நேற்று, இதே பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார். இதையறிந்த பெற்றோர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

'தற்போதுள்ள இயற்பியல் ஆசிரியரை மாற்றக் கூடாது' என்று கூறி, பள்ளி முன்பு மாணவர்கள், பெற்றோர் தர்ணாவில் ஈடுபட்டனர். 'குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து விடுங்கள்' என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. நம்பியூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன், ஈரோடு சி.இ.ஓ., மான்விழி ஆகியோர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக சி.இ.ஓ., உறுதியளிக்கவே, மாணவர் மற்றும் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us