/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குருநாதசுவாமி கோவில் விழா வாகனம் நிறுத்துமிடம்; மாற்றுப்பாதை அறிவிப்பு
/
குருநாதசுவாமி கோவில் விழா வாகனம் நிறுத்துமிடம்; மாற்றுப்பாதை அறிவிப்பு
குருநாதசுவாமி கோவில் விழா வாகனம் நிறுத்துமிடம்; மாற்றுப்பாதை அறிவிப்பு
குருநாதசுவாமி கோவில் விழா வாகனம் நிறுத்துமிடம்; மாற்றுப்பாதை அறிவிப்பு
ADDED : ஆக 12, 2025 02:10 AM
ஈரோடு, அந்தியூர் குருநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா நாளை முதல், 16ம் தேதி வரை நடக்கிறது. உள்ளூர், வெளியூரில் இருந்து தினமும், பல ஆயிரம் மக்கள் வர உள்ளனர். இதற்காக அந்தியூர் வாரச்சந்தையில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
டூவீலர், 4 வீலர்களை நிறுத்த வெள்ளை பிள்ளையார் கோவில், படுவக்காடு, மணியக்காரர் தோட்டம், வனக்காடு தண்ணீர் பந்தல், கரை பெருமாள் கோவில், சங்கராபாளையம் சுமை தாங்கி, ஆயிஅன்னக்கவுண்டர் தோட்டம், பொட்டுசாமி அம்மன் கோவில் தோட்டம், கிருஷ்ணாபுரம் - கொடவாரை தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தவிர, 13 முதல், 16 வரை வழித்தடம் - 1ல் ஈரோடு, பவானி, அண்ணாமடுவு வழியாக அந்தியூர், பர்கூர், கர்நாடகா செல்லும் கனரக வாகனங்கள், மாற்று வழியாக அண்ணாமடுவு, பட்லுார் நால் ரோடு, வெள்ளித்திருப்பூர், மூலக்கடை, பர்கூர் வழியாக கர்நாடகா செல்ல வேண்டும்.
வழித்தடம் - 2 ல் சேலம், மேட்டூர், அம்மாபேட்டை, அண்ணாமடுவு வழியாக அந்தியூர், பர்கூர், கர்நாடகா செல்லும் கனரக வாகனங்கள் மாற்று வழியாக அம்மாபேட்டை, பட்லுார் நால் ரோடு, வெள்ளித்திருப்பூர், மூலக்கடை, பர்கூர் வழியாக கர்நாடகா செல்ல வேண்டும்.
வழித்தடம் - 3ல் கோவை, திருப்பூர், சத்தியமங்கலம், கோபி, அத்தாணி, அந்தியூர் வழியாக ஈரோடு, சேலம் செல்லும் கனரக வாகனங்கள் மாற்று வழியாக அத்தாணி, கைகாட்டி, ஆப்பக்கூடல் காடையாம்பட்டி, பவானி வழியாக ஈரோடு, சேலம் செல்ல வேண்டும். இத்தகவலை ஈரோடு கலெக்டர் கந்தசாமி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

