ADDED : ஜூன் 20, 2026 05:50 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:அரசால்
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த
தகவலின்படி, பவானிசாகர் போலீசார், இந்திரா நகர் பகுதியில் ஒரு மளிகை
கடையில் ஆய்வு செய்தனர்.
இதில் ஹான்ஸ், குட்கா,பான்பராக் உள்ளிட்ட
புகையிலை பொருட்கள், 6.5 கிலோ பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய
வந்தது. கடை உரிமையாளர் திருநெல்வேலியை சேர்ந்த ராஜ்குமார், 45,
மீது வழக்குப்பதிவு செய்து, பொருட்களை பறிமுதல் செய்தனர்.
