ADDED : செப் 24, 2024 02:56 AM
ஈரோடு: கடைகளில் 'குட்கா' புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று, சூரம்பட்டி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சூரம்பட்டி வலசு, சாஸ்திரி சாலையில் ராஜேஸ்வரி மளிகை கடை, ராசி மளிகை கடை, விநாயகா டிரேடர்ஸ் பெட்டிக்கடையில் 'குட்கா' பொருட்களை பறிமுதல், மூன்று கடை உரிமையாளர்களையும் கைது செய்தனர்.
இதேபோல் கருங்கல்பாளையம் போலீசார், கே.என்.கே., சாலை தபால் அலுவலகம் ஒரு பெட்டி கடை, காவிரி சாலையில் சுப்பிரமணியர் கோவில் எதிரில் ஒரு பெட்டிக்கடை, மூலப்பாளையம், நல்லம்மாள் நகரில் ஒரு பெட்டி கடையில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் மூவரையும் கைது செய்தனர்.இதேபோல் மது அருந்த அனுமதித்ததாக, ஈரோடு, ஆண்டவர் வீதி, ரங்கீலா பஞ்சாபி ஓட்டல் மேலாளர் அருள், 56; வீரப்பம்பாளையம் பிரிவு அழுதசுரபி பஞ்சாபி ஓட்டல் மேலாளர் நடராஜன், 64, ஆகியோர் மீது
வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.