ADDED : டிச 13, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'குட்கா' விற்றோர் கைது
ஈரோடு, டிச. 13-
சூரம்பட்டி போலீசார், கள்ளுக்கடை பத்ரகாளியம்மன் கோயில் எதிரில் உள்ள மளிகை கடையில், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரான மோகன்குமார், 59, என்பவரை கைது செய்தனர். இதேபோல் பாசூர் ரயில்வே கேட் அருகே, பெட்டி கடையில் குட்கா பொருட்கள் விற்ற, ஆறுமுகம், 37, என்பவரை, மலையம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

