/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.10 லட்சம் மதிப்புள்ள 'குட்கா' பறிமுதல்; 2 பேர் கைது
/
ரூ.10 லட்சம் மதிப்புள்ள 'குட்கா' பறிமுதல்; 2 பேர் கைது
ரூ.10 லட்சம் மதிப்புள்ள 'குட்கா' பறிமுதல்; 2 பேர் கைது
ரூ.10 லட்சம் மதிப்புள்ள 'குட்கா' பறிமுதல்; 2 பேர் கைது
ADDED : அக் 23, 2024 01:24 AM
ரூ.10 லட்சம் மதிப்புள்ள
'குட்கா' பறிமுதல்; 2 பேர் கைது
பெருந்துறை, அக். 23-
பெருந்துறை எஸ்.ஐ., பாஸ்கரன் மற்றும் போலீசார், பெருந்துறை-பெத்தாம்பாளையம் ரோட்டில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது வந்த ஒரு காரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள், நான்கு மூட்டைகளில் இருந்தது தெரிய வந்தது. காருடன் குட்காவை பறிமுதல் செய்தனர்.
காரில் வந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபாராம், 33, என தெரிந்தது. பெருந்துறையில் தங்கியிருப்பது தெரிய வந்தது. அவர் தகவலின்படி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோட்டாராம், 35, என்பவரை பிடித்தனர். சீலம்பட்டியில் ஒரு குடோனில், புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கூறினார். அங்கு சென்ற போலீசார், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1,500 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்தனர்.