ADDED : மே 27, 2026 04:18 AM
அ நிறம் | அளவு
கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் யோகேஷ், 26; திண்டல் செங்கோடம்பள்ளம் பகுதியில் வசிக்கிறார். ஜிம் பயிற்சியாளர். மவுனிஷ் என்பவரிடம் இருந்து போதை பொருட்கள் மற்றும் உயர் ரக கஞ்சாவை வாங்கி, திண்டல் பகுதியில் விற்பதாக, தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சோதனை செய்ததில், விற்பனைக்காக வைத்திருந்த, 3,200 கிராம் கஞ்சா வைத்திருந்தார். போலீசார் வழக்குப்பதிந்து யோகேஷை கைது செய்தனர்.
