/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உடற்பயிற்சி கூடங்கள் ரேஷன் கடை திறப்பு
/
உடற்பயிற்சி கூடங்கள் ரேஷன் கடை திறப்பு
ADDED : நவ 09, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சி, 50வது வார்டு மகாராஜா தியேட்டர் அருகே, கம்பி வேலி
அமைக்கும் பணியை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, பூஜை செய்து
துவக்கி வைத்தார்.
இதேபோல் வார்டு, 39 மற்றும் 16ல் கே.ஏ.எஸ்., நகர்
மற்றும் சித்தன் நகரில் இரு ரேஷன் கடைகள், சத்துணவு மையம், 37வது
வார்டில் ஒரு உடற்பயிற்சி கூடம், 24வது வார்டில் மாநகராட்சி
நடுநிலைப்பள்ளியில் கூடுதல் கட்டடத்தை திறந்து செயல்பாட்டுக்கு
வழங்கினார். அப்பகுதி மக்களிடம் குறை கேட்டு மனுக்களும் பெற்றார்.
மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், மேயர் நாகரத்தினம், துணை மேயர்
செல்வராஜ், எம்.எல்.ஏ., சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்றானர்.

