/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விபத்தில்லா தீபாவளி கொண்டாடுங்கள்!
/
விபத்தில்லா தீபாவளி கொண்டாடுங்கள்!
ADDED : அக் 30, 2024 01:05 AM
விபத்தில்லா தீபாவளி கொண்டாடுங்கள்!
ஈரோடு, அக். 30-
தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுடன், நிலம், நீர், காற்று மாசுபடாமல் கொண்டாட, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா யோசனை தெரிவித்துள்ளார்.
பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அதிகப்படியான ஒலி, காற்று மாசால் சிறு குழந்தைகள், வயதானவர்கள், பெரியோர், நோய் வாய்ப்பட்டோர், வயோதிகர் பாதிக்கின்றனர்.
தீபாவளியன்று காலை, 6:00 மணி முதல், 7:00 மணி வரை; இரவு, 7:00 முதல், 8:00 மணி வரையும் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்று, திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக வெடிக்கலாம்.
மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள் அருகே வெடிக்கக்கூடாது. குடிசைப்பகுதி, எளிதில் தீப்பற்றும் இடங்களில் வெடிக்கக்கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

