ADDED : ஆக 27, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினத்தை சேர்ந்தவர் மணி, 29; நேற்று காலை, 11:00 மணியளவில், தாராபுரம் அடுத்த சிக்கினாபுரத்திலிருந்து மினி லாரியில், வைக்கோல் ஏற்றிக்கொண்டு பெல்லம்பட்டி நோக்கி சென்றார்.
பெல்லம்பட்டி பஞ்., அலுவலகம் அருகே சென்றபோது, வைக்கோலில் தீப்பிடித்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். லாரியை நிறுத்தி வைக்கோல் கட்டுகளை கீழே தள்ளி தீ பரவுவதை தவிர்க்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை. வைக்கோல் மட்டுமின்றி லாரியும் தீப்பிடித்து சேதமானது. தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின் கம்பியில் உரசியதால் விபத்து நடந்தது.