சுகாதார மேற்பார்வையாளர்கள் இடமாற்ற உத்தரவு திடீர் ரத்து
சுகாதார மேற்பார்வையாளர்கள் இடமாற்ற உத்தரவு திடீர் ரத்து
ADDED : ஆக 06, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சியில், 60 வார்டுகளுக்கு தலா ஒருவர் வீதம், 60 சுகாதார
மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர்,
குழு துாய்மை பணியாளர்களிடம் பணம் வசூலிப்பது, வேறு பணிகளில்
ஈடுபடுத்துவது போன்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில்
கடந்த, 1ம் தேதி 60 சுகாதார மேற்பார்வையாளர்களையும் இடமாற்றம்
செய்து ஆணையர் அர்பித்ஜெயின் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து
செய்து, மீண்டும் அதே இடத்தில் பணிபுரிய அனுமதிக்கக்கோரி மேயர், துணை
மேயரிடம் சுகாதார மேற்பார்வையாளர்கள் அன்றைய தினமே மனு அளித்தனர்.
இதையடுத்து, இடமாற்ற உத்தரவை ஆணையர் தற்காலிகமாக ரத்து
செய்ததால், சுகாதார மேற்பார்வையாளர்கள் பழைய இடத்திலேயே பணிபுரிய
துவங்கியுள்ளனர்.
