ADDED : மே 12, 2026 04:57 AM
அ நிறம் | அளவு
நம்பியூர்நம்பியூர் அருகே கோசணத்தை சேர்ந்த குமார் மகன் கார்த்திக்குமார் 25; கடந்த, 7ம் தேதி மாலை டூவீலரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயமடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மூளைச்சாவு அடைந்தார். அவரது உடலுறுப்புகளை தானமாக தர குடும்பத்தினர் சம்மதித்தனர்.
இதையடுத்து இதயம், சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, தேவைப்படுவோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கார்த்திக்குமாரின் இந்த தானத்தால், ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தி, உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
