/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர், சத்தி, தாளவாடியில் கனமழை
/
அந்தியூர், சத்தி, தாளவாடியில் கனமழை
ADDED : மே 18, 2025 05:47 AM
அந்தியூர்: அந்தியூரில் நேற்று மாலை, 4:30 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. அதே வேகத்தில் தவிட்டுப்பாளையம், அண்ணாம-டுவு, பழைய மேட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் அரை மணி நேரம் கனமாக கொட்டி தீர்த்தது.
இதனால் பத்ரகாளி-யம்மன் கோவில் எதிரில் கனரா வங்கி முன் மழைநீர் குளம்போல் தேங்கியது. 5:00 மணிக்கு மிதமாக மாறிய மழை, இரவு, 9:00 மணி வரை தொடர்ந்து பெய்தது. தவிட்டுப்பாளையம் பூக்கடை கார்னரிலும் மழைநீர் குட்டை போல தேங்கியதால், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்பட்டனர். பலத்த காற்றால் அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில் பேனர்கள் சரிந்தன. வெள்ளித்-திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் அரை மணி நேரத்-துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதேபோல் பர்கூர் மலையில் பர்கூர், தட்டக்கரை, பெஜ்ஜில்பாளையம், தாமரைக்-கரை, சுண்டப்பூர் பகுதியில் மாலை, 5:00 மணி முதல், 6:00 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது.சத்தி, தாளவாடியில்...
சத்தியமங்கலத்தில் நேற்று மதியம், 3:00 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.இடைவெளி விட்டு இரவு, 7:30 மணி வரை மிதமாக பெய்தபடியே இருந்தது. இதேபோல் தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக கனமழை பெய்தது. இதனால் நெய்தாளபுரம் பகுதியில் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கி, வாகன போக்குவரத்து பாதித்தது. கடம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மல்லியம்மன் கோவில் அருவி போல் மழை நீர் கொட்டியது. நேற்றும் துாறல் மழை பெய்தது.