ADDED : மே 19, 2026 02:29 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
மற்றும் சுற்று வட்டார பகுதியில், வெயில் வாட்டி
வதைத்தது. மாலை 5:00 மணி முதல், 5:30 மணி வரை, கோபி பஸ் ஸ்டாண்ட்,
புதுப்பாளையம், நாயக்கன்காடு, கரட்டூர், குள்ளம்பாளையம்.
வெள்ளாபாளையம், நாதிபாளையம் உள்ளிட்ட பகுதியில் சாரல் மழை பெய்தது.
இதேபோல்
சிறுவலுார், வெள்ளாங்கோவில், கடுக்காம்பாளையம், கொளப்பலுார்
உள்ளிட்ட பகுதியில் மாலை, 4:30 மணி முதல், ஒரு மணி நேரம் சாரல் மழை
பெய்தது.
* அந்தியூரில் மாலை, 4:30 மணிக்கு கனமழை பெய்தது. ஆனால்
சிறிது நேரத்தில் நின்று விட்டது. அதேசமயம் மைக்கேல்பாளையம்,
சங்கராப்பாளையம், பிரம்மதேசம், பச்சாம்பாளையத்தில் அரை மணி
நேரத்துக்கும் மேலாக துாறல் மழை பெய்தது.
பருவாச்சி, செம்புளிச்சாம்பாளையம், அம்மன்பாளையம் ஆகிய இடங்களில், 10 நிமிடத்துக்கும் மேல் கனமழை பெய்தது.
