ADDED : செப் 29, 2024 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகரில் நேற்று காலை, இரவில் செய்த கனமழையால், இதமான சூழ்நிலை நிலவுகிறது. தாராபுரத்தில் நேற்று காலை, 7:45 மணியளவில் திடீரென மழை பெய்தது.
இதை தொடர்ந்து படிப்படியாக அதிகரித்த வெயில், மாலை வரை வாட்டி எடுத்தது. இந்நிலையில் இரவு, 8:45 மணியளவில், திடீரென கொட்டத் துவங்கிய மழை, 45 நிமிடம் வெளுத்து வாங்கியது. இதனால், தாராபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான சூழ்நிலை நிலவுகிறது.