ADDED : ஆக 21, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு மாவட்ட வீடியோ அண்ட் போட்டோ ஒளிப்பதிவாளர் சங்கத்தின் சார்பில், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த டூ-வீலர் விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் நடந்தது. சங்க தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
செயலாளர் சசிக்குமார், பொருளாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். டவுன் டி.எஸ்.பி., ஜெய்சிங் பேரணியை துவக்கி வைத்தார். ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் துவங்கி மேட்டூர் சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, பெருந்துறை சாலை வழியாக கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.டூ-வீலர் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். கார் ஓட்டுபவர் சீட் பெல்ட் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

