தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோவில் திருப்பணிகளுக்கு இடையூறு பரம்பரை அறங்காவலர் 'சஸ்பெண்ட்'

கோவில் திருப்பணிகளுக்கு இடையூறு பரம்பரை அறங்காவலர் 'சஸ்பெண்ட்'

கோவில் திருப்பணிகளுக்கு இடையூறு பரம்பரை அறங்காவலர் 'சஸ்பெண்ட்'


ADDED : மே 25, 2026 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 02:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டியில் முத்து விநாயகர் மற்றும் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பாபு, பரம்பரை அறங்காவலராக செயல்பட்டார்.

தனிப்பட்ட முறையில் வசூலித்து, கோவிலுக்கு அரசு நலத்திட்டங்கள் மூலம் திருப்பணி செய்யவிடாமல் தடுப்பதாக, இந்து சமய அறநிலையத் துறைக்கு புகார் சென்றது.இதன் அடிப்படையில் அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து பாபுவை, ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, தற்காலிக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க, விசாரணை அலுவலராக பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையர் நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us