sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கட்டிய ஓராண்டிலேயே சேதமான உயர்மட்ட பாலம்

/

கட்டிய ஓராண்டிலேயே சேதமான உயர்மட்ட பாலம்

கட்டிய ஓராண்டிலேயே சேதமான உயர்மட்ட பாலம்

கட்டிய ஓராண்டிலேயே சேதமான உயர்மட்ட பாலம்


ADDED : ஜன 29, 2026 04:27 AM

Google News

ADDED : ஜன 29, 2026 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர்:நம்பியூர் அருகே, காரப்பாடி பகுதியில் தரைப்பாலம் அமைக்கப்-பட்டிருந்தது. அது சேதமானதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கியது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக வேலைகள் நடந்து முடிந்து பயன்பாட்டுக்கு வந்தது. இந்த பாலத்தில், நாள்தோறும், கனரக, இலகுரக வாகனங்கள் என, ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. இந்நிலையில், பாலம் தரம் இல்லாமல் கட்டப்பட்-டதால், கான்கிரீட்கள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்-றன. இதனால், வாகனங்களின் டயர்கள் பழுதாகின்றன.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த பாலம் தர-மற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கான்கிரீட் தளம் பெயர்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்-துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், இந்த பாலம் எந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது என்பது குறித்து விபரமும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, உயர்மட்ட பாலத்தை உடனடியாக சீரமைத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us