ADDED : அக் 23, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உயர்மட்ட குழு கூட்டம்
ஈரோடு, அக். 23-
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த, அனைத்து துறை அலுவலர்களுடனான, மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி துறை உட்பட அனைத்து துறை, உள்ளாட்சி அமைப்புகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சதீஷ், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு, சத்தி கோட்ட துணை இயக்குனர் குலால் யோகேஷ் விலாஷ், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
போக்சோவில் கைதானவர்

