ADDED : மே 31, 2026 02:36 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி
நகராட்சி, 25வது வார்டு சீனிவாசபுரம் பகுதியில், 200க்கும்
மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் மின் கம்பம்
ஒன்றில், உயர் மின்னழுத்த மின் ஒயர்கள் உரசியதால் நேற்று அதிகாலை,
4:00 மணியளவில் வீடுகளுக்கான மின் இணைப்பில் உயர் மின்னழுத்த
மின்சாரம் பாய்ந்தது.
இதில், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில்
பேன், பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் எரிந்து சேதமானது.
ஒரு வீட்டில் தீப்பொறி ஏற்பட்டு படுக்கை தீப்பிடித்து எரிந்தது.
வீட்டில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்.
