கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் உயர்கல்வி வேலைவாய்ப்பு நிகழ்ச்சி
கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் உயர்கல்வி வேலைவாய்ப்பு நிகழ்ச்சி
ADDED : ஏப் 23, 2026 04:29 AM

ஈரோடு:ஈரோடு,
கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் நீங்களும் ஆகலாம் ஆடிட்டர்/அரசு
அதிகாரி என்ற தலைப்பில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான, உயர்கல்வி
மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி, கல்லுாரி தாளாளர்
சச்சிதானந்தன் வழிகாட்டுதலில் நடைபெற்றது.
கல்லுாரி முதல்வர்
வாசுதேவன் தலைமை வகித்தார். நிகழ்வில், தென்னிந்திய பட்டய கணக்காளர்
அமைப்பின் திருப்பூர் பிரிவின் தலைவர் பட்டய கணக்கர் விஷ்ணுகுமார்,
முன்னாள் தலைவர் பட்டய கணக்கர் செந்தில்குமார், ஜிமேப் கூட்டமைப்பின்
நிறுவனர் மற்றும் பங்குதாரர் பட்டய கணக்கர் அருள்ஜோதி, சென்னை,
ஜெ.கே.ஷா பட்டய கணக்கர் பயிற்சி நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி பிரிவு
தலைவர் பட்டய கணக்கர் எல்லப்பராஜ், சிக்ஸா சுவாதிகா (இந்திய ஆட்சி பணி
பயிற்சி மையம்) நிறுவனர் மற்றும் இயக்குனர் சுவாதிகா ஏ சேகர்
ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்கள்,
மாணவர்களுக்கு பட்டய கணக்கர் மற்றும் இந்திய ஆட்சித் துறை சார்ந்த
உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டியதோடு, அவர்களின்
சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். இந்நிகழ்விற்கு உள்தர
உறுதிப்பாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அழகு அப்பன்
வரவேற்றார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் குமரகுரு நன்றி
கூறினார்.
இந்நிகழ்வில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
