/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை உறுதி
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை உறுதி
ADDED : ஆக 05, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் ஆடித்திருவிழா வரும், 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக இரு இடங்களில் தற்காலிக கடைகள் நடத்த ஏலம் விடப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து கடை அமைத்துள்ளனர். இவற்றை அகற்றித்தருமாறு அந்தியூர் பி.டி.,ஓ., அமுதாவிடம், ஏலம் எடுத்தவர்கள் மனு வழங்கினர். இந்த மனுவை, அந்தியூர் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளருக்கு பரிந்துரைத்தார். ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் இடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற் பொறியாளர் பாபு சரவணன் கூறினார்.