ADDED : ஆக 20, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,:ஹிந்து
முன்னணி நடத்தும், 38ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
ஈரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். பொதுச்
செயலாளர் கார்த்தி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் கிஷோர் குமார்
சிறப்புரையாற்றினார்.
தமிழர் பண்பாடும், சனாதன இந்து மதமும்
ஒன்றே என்ற தலைப்பில் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி
கொண்டாடப்படுகிறது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஈரோடு
மாநகர் மாவட்டத்தில், 1,008 இடங்களில் செப்.,14 விநாயகர் சதுர்த்தி
தினத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வது என முடிவு
செய்யப்பட்டது. 10 அடி உயர விநாயகர் சிலைகளை வைத்து பூஜிப்பது என
தீர்மானித்துள்ளனர். மாவட்ட துணைத் தலைவர் அசோக்குமார்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
