ADDED : நவ 26, 2026 01:37 AM
ஈரோடு: ஈரோடு இந்து வக்கீல்கள் முன்னணி, பா.ஜ., வக்கீல் பிரிவின் அகில பாரத வக்கீல்கள் சங்கம் இணைந்து, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்புறம் உச்சநீதிமன்ற தீர்ப்பை திருப்பரங்குன்றத்தில் அமல்படுத்தாத தமிழக அரசு, மதுரை கலெக்டர், இந்து சமய அறநிலைய துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஹிந்து வக்கீல்கள் முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் முரளி, அகில பாரத வக்கீல்கள் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் தன்ராஜ், மாநில செயலாளர் செல்லகுமார், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் பொன்.ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். * தாராபுரத்தில், பா.ஜ., வழக்கறிஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுமாறு, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து, முழக்கம் எழுப்பப்பட்டது. பா.ஜ., வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சிவகுமார்,
வஞ்சியப்பன், சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
