ADDED : ஜூலை 13, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, மாவீரன் பொல்லான் வரலாற்று மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. மீட்புக்குழு தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். ஜாதி ஒழிப்பு போராளி மதுரை வீரனுக்கு உருவச்சிலையுடன் மணி மண்டபம் கட்ட வேண்டும். இதை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் ஆக.,8ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
வரும், 17ல் மாவீரன் பொல்லான் நினைவு நாள் அரச்சலுார் ஜெயராமபுரத்தில் அனுசரிக்கப்பட உள்ளதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். பொல்லான் சுட்டு கொல்லப்பட்ட நல்லமங்காபாளையத்தில் ஊர் மக்கள் சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.