ADDED : நவ 24, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்:கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்படி, பங்களாப்புதுார் போலீசார், டி.என்.பாளையம் பகுதியில் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
டி.என்.பாளையம் நான்காவது வார்டில் ஞானசேகரன், 59, வீட்டில் சோதனை நடத்தினர். இதில், 410 கிராம் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றினர். ஞானசேகரனை கைது செய்து, கோபி நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். ஞானசேகரன் மீது, பங்களாப்புதுார் போலீசில் ஏற்கனவே, 1990 முதல் 2009 வரை, 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் தெரிவித்தனர்.

