/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர் கைது
/
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர் கைது
ADDED : ஆக 21, 2025 02:32 AM
ஈரோடு, ஈரோட்டில், ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு, சென்னிமலை ரோடு ஈ.எம்.எம்., வீதியை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் முகமது இஸ்மாயில், 27. கறி வெட்டும் தொழிலாளி. திருமணமாகாதவர். கடந்த, 16ல் மன நலம் பாதிக்கப்பட்ட ஈரோட்டை சேர்ந்த, 12 வயது சிறுவனை, கன்னத்தில் அறைந்து வலு கட்டாயமாக பல்சர் பைக்கில் ஏற்றிக்கொண்டு, பழைய ரயில்வே குடியிருப்பு பகுதிக்கு அழைத்து சென்று தவறான செயலில் ஈடுபட்டுள்ளார்.
வலி தாங்க முடியாமல் சிறுவன் கூச்சலிட்டுள்ளார். மேலும் சிறுவனிடம், இதுபற்றி கூறினால் கொலை செய்து விடுவேன் என, முகமது இஸ்மாயில் மிரட்டியுள்ளார். இதுகுறித்து, சிறுவர் நலக்குழுவில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த ஈரோடு சூரம்பட்டி போலீசார், நேற்று போக்சோவில் வழக்குப்பதிந்து இஸ்மாயிலை கைது செய்தனர்.