ADDED : அக் 03, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மருத்துவமனையில்
துாய்மை பணி
பெருந்துறை, அக். 3-
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பெருந்துறை பா.ஜ., சார்பாக துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துாய்மை பணி, அரசு மருத்துவமனை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
சுற்றுச்சூழல் பிரிவு மாநில செயலாளர் மூர்த்தி தலைமையில், துாய்மை பணிகள் நடைபெற்றது.
மாவட்ட முன்னாள் தலைவர் இமயம் சந்திரசேகரன், மாவட்ட பிரசார பிரிவு துணைத் தலைவர் ஆறுமுகம், மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் மருத்துவர் ராகவ், நகர துணைத் தலைவர் சங்கர், நகர செயலாளர் கோபால் உள்பட பலர் துாய்மை பணி செய்தனர்.

