ADDED : அக் 14, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே நஞ்சவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பண்ணன், 65. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். கடந்த செப்.,19ல் சேலத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தார்.
அந்த சமயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, அரை பவுன் தங்க காசு இரண்டு, 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது. அவர் புகாரின்படி விசாரித்த கோபி போலீசார், கோபியை சேர்ந்த ராஜா முகமது, 32, என்பவரை நேற்றிரவு கைது செய்தனர். இரு தங்க காசுகளை பறிமுதல் செய்தனர்.