/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடியிருப்புவாசிகள் எதிர்ப்பை மீறி சாலை பணிக்காக வீடுகள் இடிப்பு
/
குடியிருப்புவாசிகள் எதிர்ப்பை மீறி சாலை பணிக்காக வீடுகள் இடிப்பு
குடியிருப்புவாசிகள் எதிர்ப்பை மீறி சாலை பணிக்காக வீடுகள் இடிப்பு
குடியிருப்புவாசிகள் எதிர்ப்பை மீறி சாலை பணிக்காக வீடுகள் இடிப்பு
ADDED : ஜன 25, 2025 02:03 AM
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குண்டடம், திருப்பூர் ரோடு பிரிவு முதல், பல்லடம் வரையிலான இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலை-யாக மாற்றும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நி-லையில் குண்டடம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள வீடு மற்றும் கடைகளை காலி செய்ய, நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.
'அந்த இடத்தில், 60 ஆண்டுகளாக வசிக்கிறோம், முறைப்படி பட்டா உள்ளது. எனவே உரிய இழப்பீடு வழங்கினால் காலி செய்கிறோம்' என்று தெரிவித்து வந்தனர். இதற்கு நெடுஞ்சா-லைத்துறை மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை ஆக்கிரமிப்பை அகற்ற, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கணேசமூர்த்தி தலைமையிலான ஊழியர்கள், பொக்லைன் இயந்-திரங்களுடன் வந்தனர்.வீட்டில் குடியிருந்தவர்கள் இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், எதிர்ப்பு தெரிவித்தவர்களை காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன் தலைமையிலான போலீசார், குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தி வேனில் ஏற்றி சென்றனர். இதை தொடர்ந்து சாலை விரிவாக்க பணிகளுக்கு தடையாக இருந்த வீடுகள் இடிக்கப்பட்டன. எதிர்ப்பு, வாக்குவாதத்தால் அப்பகுதியில் பல மணி நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

