தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்


ADDED : ஏப் 27, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 04:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாநகரில் உள்ள பல்வேறு நிறுவனங்களில், வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வார விடுமுறை அல்லது பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

கடந்த வியாழக்கிழமை சட்டசபை தேர்தல் நடந்ததால், அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மறுநாள் வெள்ளிக்கிழமை கூடுதலாக விடுமுறை எடுத்தால் தொடர்ந்து நான்கு நாள் விடுமுறை கிடைத்தது. இதை பயன்படுத்தி புதன்கிழமை இரவே தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதேபோல் வெளியூரில் வசிப்பவர்களும் ஈரோட்டுக்கு வந்தனர். இந்நிலையில் விடுமுறை முடிந்ததால், நேற்று மீண்டும் தங்கள் இடங்களுக்கு கிளம்பினர். இதனால் ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில், மதியம் முதலே பயணிகள் வருகை அதிகரிக்க துவங்கியது. இதனால் அனைத்து வழித்தட பஸ்களும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us