/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு சட்டக்கல்லுாரியில் மனித உரிமைகள் தினம்
/
ஈரோடு சட்டக்கல்லுாரியில் மனித உரிமைகள் தினம்
ADDED : டிச 13, 2025 06:23 AM

ஈரோடு: ஈரோடு சட்டக்கல்லுாரி, ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுடன் இணைந்து, அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகள் தினத்தை நீதித்துறை, ஆசிரியர் மற்றும் மாணவர்-களை ஒன்றிணைத்து ஒரு நாள் கருத்தரங்கு நடத்தியது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி துணைத்தலைவர் காயத்ரி அருண் பாலாஜி தலைமை தாங்கினார். இணை செயலாளர் அருண்பாலாஜி முன்-னிலை வகித்தார். ஈரோடு மாவட்ட விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் முனிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முற்பகல் அமர்வில் மதுரை அரசு சட்டக்கல்லுாரி உதவி பேராசிரியர் முகமது ரபி, நீதித்துறை பிரதிபலிப்புகள் மற்றும் கண்ணியத்தின் நீதித்துறை பாதுகாவலரின் உரிமைகள் மற்றும் நீதி என்ற தலைப்பில் பேசினார். பயிலரங்கத்தை கல்-லுாரி முதல்வர் அக்பர் அலி பெய்க் தொடங்கி வைத்தார். பேரா-சிரியை பூஜாஸ்ரீ நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரி-யர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

