/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நுாறு நாள் வேலை திட்ட சங்க நிர்வாகிகள் கூட்டம்
/
நுாறு நாள் வேலை திட்ட சங்க நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஜூன் 01, 2025 01:21 AM
சத்தியமங்கலம், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி வட்டாரங்களை சேர்ந்த, நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம், சத்தியமங்கலத்தில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமை வகித்தார். நுாறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை.
கூலி வரும் வரை வேலைக்கு செல்வதில்லை என முடிவு செய்திருந்தனர். கூலி பாக்கி முழுவதும் கிடைத்த நிலையில், சங்க நிர்வாக கூட்டம் நேற்று நடந்தது. இதில் வேலை நிறுத்தத்தை திரும்ப பெற முடிவு செய்தனர். இப்பகுதிகளில் உள்ள, 40 ஊராட்சிகளிலும், வேலை கேட்டு நாளை மனு அளிக்கவும் தீர்மானம் செய்தனர். இதில், 300க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.