/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் சத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகை
/
நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் சத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகை
நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் சத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகை
நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் சத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகை
ADDED : பிப் 04, 2025 05:52 AM
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கடம்பூர், பவானிசாகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட, நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், பவானி-சாகர் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமையில், சத்தி தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில், 76 லட்சம் குடும்பங்களை சேர்ந்த, 91 லட்சம் தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி செய்கின்றனர். இந்த நிதியாண்டில் நுாறு பேர் வேலை செய்த இடத்தில், 25
பேருக்கு தான் வேலை வழங்குகின்-றனர். மத்திய அரசு தர வேண்டிய, 1,506 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள இரண்டு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி போராட்டம் நடந்தது. சத்தி தாசில்தார், தாளவாடி, பவானிசாகர், சத்தி வட்டார வளர்ச்சி
அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்-படும் எனக்கூறவே, அனைவரும் கலைந்து
சென்றனர்.