sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எரி சாராய ஆலையை கண்டித்து உண்ணாவிரதம்

/

எரி சாராய ஆலையை கண்டித்து உண்ணாவிரதம்

எரி சாராய ஆலையை கண்டித்து உண்ணாவிரதம்

எரி சாராய ஆலையை கண்டித்து உண்ணாவிரதம்


ADDED : டிச 22, 2025 06:13 AM

Google News

ADDED : டிச 22, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: எரிசாராய ஆலை கழிவால், பல்வேறு பாதிப்பு ஏற்படுவதாக கூறி, பவானி அருகே, 200க்கும் மேற்பட்ட மக்கள், உண்ணாவி-ரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சின்னபுலியூரில், பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான எரி சாராய ஆலை, 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆலைக்குள் தேக்கி வைத்-துள்ள கழிவு நீரால் துர்நாற்றம் எழுகிறது. இதனால் சின்னபு-லியூர், பெரியபுலியூர், வைரமங்கலம், எவலமலை பஞ்சாயத்து-களில் கடும் பாதிப்பை ஏற்படுவதாக, மக்கள் குற்றம் சாட்டி வரு-கின்றனர். துர்நாற்றத்தால் நுரையீரல் தொற்று, மூச்சுத்திணறல் ஏற்-படுகிறது. சிலர் மரணமடைந்தும், இன்னும் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.தற்போது ஆலை நிர்வாகம், கொதிகலன் மூலமாக. காற்று மாசை தடுக்க, நிலைமின் வீழ்படிவாக்கி அமைத்தனர். இந்த கருவி நிறுவப்பட்ட பின், புகை போக்கியை உயரமாக அமைத்-துள்ளது.

இதனால் வெளியேறும் புகையில், சாம்பல் துகளுடன் துர்-நாற்றம் ஏற்படுவதாக, மற்றொரு குற்றச்சாட்டை முன்வைக்கின்-றனர். மேலும் விவசாய பயிர்களும் பாதிப்பதாக கூறுகின்றனர். பல துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி, ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள், 200க்கும் மேற்பட்டோர், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நச்சுப்-புகையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்தகட்ட போராட்டம் பெரிய அளவில் இருக்கும் என்றும் எச்-சரித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us