/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கணவன், மனைவி தற்கொலை மலை கிராமத்தில் அதிர்ச்சி
/
கணவன், மனைவி தற்கொலை மலை கிராமத்தில் அதிர்ச்சி
ADDED : அக் 06, 2025 04:31 AM
சத்தியமங்கலம்: தாளவாடிமலை, ஆசனுார் அருகேயுள்ள கோட்டாடையை சேர்ந்தவர் ராஜ்குமார், 30; இவரின் மனைவி அரேபாளையத்தை சேர்ந்த ஷாலினி, 26; தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்-ளன.
குடும்பத்துடன் சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் தம்பதியர் வசித்தனர். ராஜ்குமார் தற்காலிக பணியாளராக பண்ணாரி கோவில் கோசாலையில் வேலை செய்தார். ஷாலினி கோவில் பகுதியில் உள்ள பொம்மை கடையில் வேலை செய்தார். சில நாட்களுக்கு முன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், அரேபாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்-டுக்கு ஷாலினி சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்-தினம் இரவு மது போதையில் அங்கு சென்ற ராஜ்குமாருக்கும், ஷாலினிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் துாங்-கிய பிறகு வீட்டு கதவை வெளியில் பூட்டி விட்டு, இரும்பு கம்-பியில் துாக்கிட்டு ஷாலினி தற்கொலை செய்து கொண்டார். அவ-ரது உடல் சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் யாரும் அங்கு இல்லை. இந்நிலையில் மனைவி துாக்-கிட்டு கொண்ட அதே இடத்தில் ராஜ்குமாரும் துாக்கிட்டு தற்-கொலை செய்து கொண்டார். மனைவி, கணவன் அடுத்தடுத்து துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, மலை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.