ADDED : அக் 25, 2025 01:36 AM
சென்னிமலை, சென்னிமலை யூனியன் ஈங்கூர் ஊராட்சி, கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 31; சிப்காட் பகுதியில் ஒரு டெக்ஸ்டைல்ஸ் கம்பெனி ஊழியர். ஆறு மாதங்களாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த அண்ணி முறையான பெண்ணுடன் மொபைல்போனில் மணிகண்டன் பேசி வந்துள்ளார். இதையறிந்து மனைவி கண்டித்த நிலையில் மாயமாகி விட்டார். மனைவி நிஷா புகாரின்படி, சென்னிமலை போலீசார் தேடி வருகின்றனர். மணிகண்டனுக்கு, இரு மகள்கள் உள்ளனர்.
* பவானி வர்ணாபுரத்தை சேர்ந்தவர் குமார், 66; இவரது மனைவி பிரகதீஸ்வரி, 58; இருவரும் அதே பகுதியில் ஆவின் பால் விற்பனை நிலையம் நடத்துகின்றனர். தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நான்கு நாட்களுக்கு முன், குமாரும் அவரது மகனும் கோவை சென்றனர். வீட்டுக்கு திரும்பிய நிலையில் பிரகதீஸ்வரியை காணவில்லை. குமார் புகாரின்படி பவானி போலீசார் தேடி வருகின்றனர்.

